கொரோனா தொற்றால் உயிரிழந்த திரை பிரபலம்! சோகத்தில் திரையுலகினர்!

Photo of author

By Sakthi

நோய்த் தொற்று பரவ காரணமாக, நாள்தோறும் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு உயிர்களை இழந்து வருகிறது.திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், என்று மாபெரும் ஜாம்பவான்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரஇழந்து போகிறார்கள்.திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த், நடிகர் பாண்டு, உள்ளிட்ட பலரை இந்த நோய்த்தொற்று விழுங்கிவிட்டது.

அதேபோல அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். அதிமுகவை பொருத்தவரையில் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு அமைச்சர் மற்றும் திமுகவில் ஜெ அன்பழகன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் இந்த நோய்த்தொற்றின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலையில் பொது மக்களைவிட பிரபலங்கள் தான் அதிகமாக மடிந்து போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் போன்ற பலரும் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிற நடிகர் ரித்தீஷ் வீரா இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.