Africa:கினியா நாட்டில் கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு.
கால்பந்து போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பால் 100 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்து இருக்கும் சோகம் கினியாவில் நாட்டில் நடந்திருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு கினியா நாட்டில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார் இராணுவ தலைவர் மமதி டூம்பூ. அவரை கௌரவிக்கும் வகையில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஏற்பட்ட கலவரத்தால் தான் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி இருக்கிறார்கள். ஆப்பிரிக்கா நாடான கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான n’zerekore யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் நடுவர் சர்ச்சைக்குரிய முடிவை வழங்கி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கால்பந்து விளையாட்டு அரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். மேலும் விளையாட்டு அரங்கிற்கு வெளியே கலவரம் வெடித்து இருக்கிறது.இந்த கலவரத்தில் பொதுமக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். அந்த நகரில் உள்ள மருத்துவ போராட்டதில் அடிப்பட்ட மக்கள் நிரம்பி வழிகிறார்கள். மேலும் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் 100க்கு மேற்பட்ட மக்கள் இறந்து இருக்கிறார்கள்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகள் மக்கள் அதிக அளவில் விரும்பி விளையாடக்கூடிய விளையாட்டுகளில் முதன்மையாக இருப்பது கால்பந்து விளையாட்டு அதிக அளவில் நடைபெறும் விளையாட்டும் இதுவே ஒரு நடுவரின் தீர்ப்பால் 100க்கு மேற்பட்ட உயிர்கள் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.