Syria: சிரியா மீது இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மாயமாகி இருக்கிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 10 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியா அதிபர் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்கள் போரை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு சவுதி அரேபியா அல்கொய்தா போன்ற அமைப்புகள் ஆயுத உதவிகளை செய்து வருகிறது.
அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ, ஹோம்ஸ், ஹமா, டமாஸ்கஸ் போன்ற சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றினார்கள். சிரியா அதிபர் ரஷ்யாவிற்கு தப்பி தஞ்சம் அடைந்து இருக்கிறார். இந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இஸ்ரேஸ் சிரியா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
குறிப்பாக லதாகியா மற்றும் டார்டஸ் துறைமுகங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகளை குறி வைத்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் போர் காரணமாக ஒரு லட்சத்துக்கு அதிகமாவார்கள் அகதிகளாக சிரியாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மேலும் சுமார் 200,000 பேர் மாயமாகி இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிரியா டமாஸ்கஸில் உள்ள அல் முஜ்தாஹித் மருத்துவமனை பல ஆயிரம் கணக்கான பிணங்கள் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மருத்துவமனையில் உள்ள உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு இருக்கிறது. எனவே மனித உரிமை ஆணையம் இதில் தலையிட வேண்டும் என கோரிக்கை எழுந்து இருக்கிறது.