1 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
129

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழக அரசின் தனியார் துறை வேலை இணையதளம் Tamilnadu private jobs portal என்ற இணையதளத்தை தொடங்கியது.

இந்த இணையதளத்தில் தற்போது வரையில் 4814 தமிழ் நிறுவனங்கள் வேலை அளிப்பவராக பதிவு செய்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை தேடுபவர்களாக பதிவு செய்துள்ளார்கள்.

சமீபத்திய விவரங்களின்படி சற்றேறக்குறைய 42 தொழில் பிரிவுகளின் கீழ் 101,703 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளனர். ஆகவே ஆரம்பமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த இணையதளத்தின் கீழ் பதிவு செய்து பயனடையலாம்.

ஊதியம் மற்றும் மற்ற தேவைகள் வேலை செய்யும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களின்படி வேலைவாய்ப்பு தேடிக் கொள்ளலாம். இந்த சேவை முற்றிலுமாக இலவசம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல நீங்கள் வேலை வழங்குபவராக இருந்தால் இந்த இணையதளத்தில் பதிவு செய்து தங்களுடைய நிறுவனத்துக்கு ஏற்ற தகுதியான மனித வளத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

www.tn private jobs.tngov.in என்ற இணைய பக்கத்தில் செல்லவும் முகப்பு பக்கத்தில் வேலை தேடுபவர் என்பதை தேர்வு செய்து உள்நுழை என்பதை தட்டவும். அதில் புதிய கணக்கை உருவாக்குக என்பதற்கு பெயர், தந்தையின் பெயர், மின்னஞ்சல், கைபேசி எண், ஆதார் எண் கடவுச்சொல் போன்ற விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும்.

தங்களுடைய கைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி என்னை உள்ளிட்டு வெற்றிகரமாக உள் நுழைய வேண்டும்.

Previous articleமொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!
Next articleஅமுல் நிறுவனத்துடன் ஒன்றிணையும் 5 கூட்டுறவு சங்கங்கள்! மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!