தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு!
ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் போர் ஏற்பட்டு ஆப்கன் அரசை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். தற்போது புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசுக் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது பெண்களுக்கு ஷரியத் சட்டப்படி அமைக்கப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் 1919 ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102 ஆவது சுதந்திர தின விழா கடந்த 19ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அமீரகமாக பெயரை மாற்றி தலிபான்கள் பிரகடனம் செய்துள்ளனர். இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்றும் பெயரை மாற்றி உள்ளனர்.
இதனை தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஹபிபுல்லா தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார். ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் தலிபான்களால் தற்போது நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க தலிபான்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே மோதல்களும் வெடிக்கத் தொடங்கி உள்ளன. அதிலும் குறிப்பாக ஜலாலாபாத் நகரில் தலிபான்களின் கொடியை இறக்கி விட்டு ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை போராட்டக்காரர்கள் ஏற்றியுள்ளனர்.
அதன் காரணமாக அங்கு நடந்த வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதைப்போல கோஸ்ட் மாகாணத்திலும் வன்முறை சம்பவங்கள் ஆரம்பித்ததை தொடர்ந்து, அந்த மாகாணம் முழுவதும் 24 மணி நேர ஊரடங்கை தலிபான்கள் அமல்படுத்தி உள்ளனர். அதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் வெளியேறுவதற்காக மட்டும் சுமார் 6 ஆயிரம் பேர் காத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் உள்ள இவர்கள் விரைவில் விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் ஜோ பைடன் அரசு உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாதவர்கள் தங்கள் குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்றுங்கள் என அமெரிக்க ராணுவத்தினர் இடமோ அல்லது தப்பிச் செல்லும் நபர்களிடமோ தங்களது குழந்தைகளை கொடுத்து அனுப்புகின்றனர்.
ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல தங்களுக்கு உரிமை இல்லை என அந்த வீரர்கள் கண் கலங்கியவாறு தாய்மார்களிடமே குழந்தைகளை திரும்ப ஒப்படைக்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. அதுதான்ங்க தாய் உள்ளம் குழந்தையை மட்டுமாவது காக்க அவர்கள் தன்னை பிரிந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து அவ்வாறு சொல்லி இருக்கின்றனர்.