காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே!

காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே!

நமது தமிழ் படங்களில், பொதுவாக சினிமா படங்கள் என்றாலே காதலிக்கு முன் நெற்றியில்  குங்குமம் இடுவதை ஒரு மிகப்பெரிய நிகழ்வாக காட்டி வருகின்றனர். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டால் அவர்கள் காதலனுக்கே முழுவதும் சொந்தம் என்றெல்லாம் என்னும் வகையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது அது போல் செய்து காதலன் நொந்து போன ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை மட்டும் தற்போது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். பல்வேறு வகையான கருத்துக்களையும் அதற்கு பகிர்ந்து வருகின்றனர். உத்திரபிரதேசம் ஹர்பூர் சேர்ந்த வாலிபரும், ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. எனவே இந்த நிலையில் வாலிபரும் வேலை விஷயமாக வெளியூர் வரை சென்று வர வேண்டியிருந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த காதலியின் வீட்டில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் மிக மும்முரமாக செய்து வந்தனர். காதலி வேண்டாம் என்று பல முறை கூறினாலும் பெற்றோர் அவரை போராடி சம்மதிக்க வைத்தனர். அவரை மிரட்டியும் உள்ளனர். அதனால் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு பெண் சம்மதித்துள்ளார். எனவே ஹர்பூர் புதாத் பகுதியில் திருமணம் நடைபெற்றது.

திருமண மேடையில் திருமண நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது மணமகனும் மணமகளும் திருமண சம்பிரதாயமான மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது முகத்தைத் முழுவதுமாக மூடிய நிலையில் ஒரு வாலிபர் திடீரென மணமகளுக்கு வலுக்கட்டாயமாக நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தார். இதை திருமண மண்டபத்தில் இருந்த பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெண்ணின் கணவனும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார். இதனைக் கண்ட அந்த பெண்ணின் குடும்பம் அந்த வாலிபரை அடிக்கத் தொடங்கியது. அதோடு அது மட்டுமன்றி போலீசாரை வரவழைத்து அந்த நபரை ஒப்படைத்தனர். அதன் பிறகு தான் இவர்களது திருமணம் முடிந்தது. அந்த பெண்ணின் காதலன்தான் இவ்வாறு செய்துள்ளான். சினிமா படங்களில் இப்படி காட்டப்படும் உணர்ச்சி பூர்வமான விஷயங்களை அவர் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் பயன்படுத்தி பார்த்துள்ளார்.

ஆனால் காதலித்த அந்த நபர் யார் என்பது அந்த பெண்ணுக்கே தெரியாதது தான் அங்கு ஒரு வேடிக்கையான விஷயமாக இருந்தது. திருமணத்தை நிறுத்த வேண்டும் அல்லது காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் காதலன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Comment