இணையத்தில் வெளியாக தயாராகும் திரைப்படங்கள்!

Photo of author

By Sakthi

நோய் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பல புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது.சென்ற வருடம் சூரரை போற்று, பென்குயின்,பொன்மகள் வந்தாள், போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. இதனையடுத்து பலத்திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக தொடங்கியது. அதன்படி வரும் 18ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கின்ற ஜகமே தந்திரம் திரைப்படம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. அதோடு தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் மூன்று புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அந்த தகவலின் படி நெற்றிக்கண், ராக்கி, கூலாங்கல் போன்ற திரைப்படங்கள் இணையதள வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா சோலோ கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கூழாங்கல் திரைப்படத்தை தயார் செய்திருக்கிறது. அதேபோல ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ராக்கி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறது. விரைவில் இந்த திரைப்படங்களின் இணையதள வெளியீடு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.