DMK TVK: திரைப்பட நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அடுத்தடுத்த தேர்தல்களில் விஜய் எந்த தரப்பில் நிற்பார், எந்த கூட்டணியில் இணையப்போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கணிப்புகள் சூடுபிடித்துள்ளன. தவெக தலைவர் விஜய் திமுக தான் தனது அரசியல் எதிரி என்று கூறி வருகிறார்.
அவரது பிரச்சாரத்திலும், மாநாடுகளிலும் திமுகவிற்கு மாற்று தவெக தான் என்றும் திமுக அரசை கடுமையாக வஞ்சித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கரு. பழனியப்பன் எதிர்காலத்தில் அரசியல் சூழ்நிலைகளின் போக்கை பொருத்து, திமுக கூட விஜய்க்கு எம்.பி.பதவி வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், எதிர் காலத்தில் விஜய் திமுக உடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.
கரு. பழனியப்பனின் இந்த கருத்து, திமுக-விஜய் எதிர்கால உறவுகளை பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி, அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.