பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தயாரான இளைஞர் படை!

Photo of author

By Sakthi

எதிர்வரும் 31ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கின்றது எனவும், அதில் தமிழக அரசியலை மையமாக வைத்து மிக முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்டோர், முன்னிலை வகிக்க இருக்கிறார்கள். அந்த கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை ஏற்க இருக்கின்றார்.

தமிழகம், மற்றும் புதுச்சேரியில், இருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகளுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் அணிகள் மற்றும் துணை அமைப்புகள், ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். எதிர்வரும் 31ஆம் தேதி நடைபெற இருக்கின்ற இந்த கூட்டமானது காலை 11 மணி அளவில் இணையவெளியில் ஆரம்பித்து நடக்க இருக்கின்றது.

இந்தக் கூட்டத்திலே, வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கொள்ளவிருக்கும் முடிவு தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்சமயம் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.