வாழ்வா சாவா எனும் நிலையில் மும்பை மற்றும் பெங்களூரு!! இராஜஸ்தான் நிலைமை என்ன ஆகும்!!
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று கடைசி லீக் சுற்றுகள் நடைபெறும் நிலையில் வாழ்வா சாவா என்னும் நிலையில் பெங்களூரு அணியும் மும்பை அணியும் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுகிறது. இவர்களின் வெற்றி தோல்வி குறித்து இராஜஸ்தான் அணியின் பிளே ஆப் வாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
இன்று அதாவது மே 21ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு துகுதி பெறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இன்று இரவு நடக்கும் மற்றொரு போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முயற்சி செய்யும் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இல்லையேல் தொடரை விட்டு வெளியேறிவிடும்.
இன்று நடைபெறும் போட்டிகளில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அவ்வாறு இல்லாமல் இரண்டு அணிகளும் தோல்வி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அவ்வாறு இல்லாமல் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அதாவது மும்பை அணி மட்டும் வெற்றி பெற்றும் பெங்களூரு அணி தோல்வி பெற்றால் மும்பை அணி நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். பெங்களூரு அணி வெற்றி பெற்று மும்பை அணி தோல்வி பெற்றால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.