மும்பை டெஸ்ட்! வலுவான நிலையில் இந்திய அணி தொடரை வெல்லுமா!

Photo of author

By Sakthi

இந்திய அணி அபாரமாக பந்துவீசி நியூசிலாந்து அணியை 62 நிறுத்தியது 2வது இன்னிங்சை தொடங்கி இருக்கின்ற இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்து 332 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த இந்திய அணியின் விராட் கோலி, புஜாரா, உள்ளிட்டோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தாலும், தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 150 ரன்கள் சேர்த்த நிலையில்,, அஜாஸ் படேல் பந்துவீச்சில் தன்னுடைய விக்கெட்டை இழந்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேலின் மாயாஜால சுழலில் சிக்கிய இந்திய அணி 109.5 ஓவர்களில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தன்னுடைய இன்னிங்சை ஆரம்பித்தது இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள இயலாமல் நியூசிலாந்து அணி தத்தளித்து வந்தது. 28.7 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்த நியூசிலாந்து அணி 62 ரன்களில் ஆட்டமிழந்தது. தன்னுடைய பந்துவீச்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும்,, சிராஜ் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நியூசிலாந்து அணி பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 69 ரன்கள் எடுத்து 332 ரன்கள் முன்னிலை வலுவான நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணி இன்று காலை தன்னுடைய இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி தற்போது வரையில் 2 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து இருக்கிறது. சுப்மன் கில் 2 ரன்களுடனும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருக்கிறார்கள்.