தொடங்கியது 14வது ஐபிஎல் சீசன்!

0
160

இந்த வருடத்திற்கான ஐபிஎல் டி20 போட்டி இன்று சென்னையில் ஆரம்பிக்கிறது இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடந்து முடிந்து ஐந்து மாதங்கள் கூட முடியாத ஒரு சூழ்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஆரம்பமாகிறது இந்த போட்டியில் மும்பையும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றனர்.

அதில் மும்பை அணி பதினேழு போட்டிகளிலும் பெங்களூரு அணி ஒன்பது போட்டிகளிலும் வெற்றி அடைந்திருக்கின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை ஏழு முப்பது மணி அளவில் தொடங்க இருக்கிறது. இந்த மைதானம் எப்பொழுதும் வீசுதல் மற்றும் பறந்து வீசுதல் என்று இரண்டிற்குமே ஒத்துழைப்பாக இருக்கும் ஏனென்றால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானம் மிகவும் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இங்கே முதலில் மட்டை வீசும் அணி சுமார் 170 ரன்களை எடுத்தால் ஓரளவிற்கு வெற்றி அடையலாம் என்று கடந்தகால வரலாறு தெரிவிக்கிறது. மும்பை அணியை பொறுத்தவரையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது. துவக்க ஆட்டக்காரர்கள் நிதானம், அதேவேளையில் அதிரடியாக ஆடக்கூடிய நடுவரிசை வீரர்கள் சிக்ஸர் பறக்க விடும் வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட கொடுக்காமல் விக்கெட்டை கைப்பற்றும் சிறந்த பந்துவீச்சாளர்கள் என்று சிறந்த வீரர்கள் மும்பை அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதேவேளையில், பெங்களூரு அணியை பொறுத்தவரையில் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய வீரர்களை வெளியேற்றியும் இந்த முறை புதிய வீரர்களை அணியில் சேர்த்தும் இருக்கிறது. துவக்க ஆட்டக்காரர் சரியாக அமையாமல் இருப்பதால் விராட் கோலியின் தொடர்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இருக்கிறார். நடுவரிசை பலப்படுத்த ஏபி டிவில்லியர்ஸ் உடன் மேக்ஸ்வெல் மற்றும் டேனியல் கிறிஸ்டின் ஆகியோர் இணைய இருக்கிறார்கள் பந்துவீச்சை பலப்படுத்தும் விதமாக கைல் ஜெமிசன் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்

Previous articleஇவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!
Next articleமத்திய அரசிற்கு அதிர்ச்சிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ்!