முருகன் எங்களுக்கு டார்கெட் இல்ல; முருகனை வைத்து அரசியல் பண்ணறவங்க தான் எதிரி..நடிகர் அமீர் பேட்டி!

0
137

மதுரையில் வரும் 21ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பாக பாஜக சங்க பரிவார் அமைப்புகள் இணைந்து முருக பக்தர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மனித சங்கலை பேரணி நடைபெற்றது.

அதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் மதநல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனித சங்கலி போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். இந்த மனித சங்கிலியின் நோக்கம் முருகன் எங்களுக்கு எதிரானவர் அல்ல முருகன் பெயரை வைத்து அரசியல் செய்பவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்பதுதான்.

நீதிமன்றம் தான் வழிகாட்டுதல் கொடுத்தாலும் அப்புறம் எதற்கு நீங்கள் இந்த மனித சங்கலியை நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பலாம் நீதிமன்றம் எத்தனை முறை வழிகாட்டுதல் அளித்தாலும் அந்த அமைப்புகளின் மாநாட்டின் உண்மையான நோக்கம் மக்களுக்கு புரிய வைப்பதற்காக இந்த மனித சங்கிலி போராட்டத்தை நாங்கள் நடத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

முருகன் பெயரை வைத்து கலவரம் செய்ய துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். திருமாவளவன் பேசுகையில் இந்த மனித சங்கிலி போராட்டம் முருக பக்தர்களுக்கு எதிரானது கிடையாது. முருக பக்தர்கள் சனாதனத்திற்கும் சதி அரசியலுக்கு வழி விடக்கூடாது என்று சுட்டிக் காட்டுவதற்காக இங்கு குவிந்திருப்பதாக தெரிவித்தார்.

மதுரை மண்ணில் மத நல்லிணக்கம் உள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் யாரும் இஸ்லாமியர்களை பகைத்துக் கொள்ளவில்லை.

இஸ்லாமியர்கள் இந்துக்களை பகையாக கருதவில்லை அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் திருப்பரங்குன்றத்திலேயே பகைமை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அதனை வைத்து அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர் என பேசினார்

Previous articleரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்; பயணிகளே இத உடனே பண்ணுங்க!
Next articleதலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!