முருங்கைக்காய் சிப்ஸ் தொடர்பாக வெளியான புதிய தகவல்!

0
135

சந்தனு நடிப்பில் உருவாகி இருக்கின்ற முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை ஓட்டியில் வெளியிடுவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மாஸ்டர் திரைப்படத்தில் கிடைத்த அறிமுகத்திற்குப் பின்னர் நடிகர் சாந்தனு நடிக்கும் திரைப்படம்தான் முருங்கைக்காய் சிப்ஸ் அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கிய இத்திரைப்படத்தில் சாந்தனு உடன் அவருடைய தந்தை நடிகர் பாக்கியராஜ் அவர்களும் இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ஆனந்தராஜ், யோகிபாபு, ஊர்வசி, மயில்சாமி, முனீஸ்காந்த், போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள்.

நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படமாக உருவாகி இருக்கின்ற இந்த திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது. தருண் குமார் இசையமைத்து இருக்கின்ற இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக கவிச்சக்கரவர்த்தி பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் வித்தியாசமான முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் வேலைகள் எல்லாம் முடிவடைந்து வெளி வருவதற்கு தயாராக இருக்கிறது. இதற்க்கு முன்னரே ஊரடங்கு காரணமாக, தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கிறது. தியேட்டர்கள் எப்போது சமயத்தில் திறக்கப்படும் என்பது தற்போது உறுதியாக தெரியாத நிலை இருந்து வருகிறது. அதன் காரணமாக தயாரிப்பாளர்கள் எல்லோரும் ஓடிடியில் திரைப் படங்களை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், முருங்கைகாய் சிப்ஸ் திரைப்படத்தை போட்டியில் வெளியிடுவதற்கு படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பினராயி விஜயன்!
Next articleருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?