இசையா பாடாலா? ரஜினியிடம் செய்தியாளர் கேள்வி! அண்ணா நோ கமெண்ட்ஸ்! சூப்பர்ஸ்டார் கூறிய பதில்!

Photo of author

By Sakthi

இசையா பாடாலா? ரஜினியிடம் செய்தியாளர் கேள்வி! அண்ணா நோ கமெண்ட்ஸ்! சூப்பர்ஸ்டார் கூறிய பதில்!
இமயமலை செல்வதற்காக புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் செய்தியாளர்களில் ஒருவர் இசையா பாடலா என்றும் மீண்டும் மோடி வருவாரா என்றும் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சட்டென்று பதில் அளித்துள்ளார்.
இயக்குநர் டிஜி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஓய்வு எடுக்க அபுதாபி சென்றார். 10 நாட்கள் ஓய்வு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று(மே28) சென்னை திரும்பினார்.
இதையடுத்து சென்னை திருப்பிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஒவ்வொரு திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னரும் இமயமலை செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறை வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து இமயமலை செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் போயஸ் கார்டனில் இருந்து விமான நிலையம் புறப்பட்டார்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில்  “நான் ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். நான் அங்கு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களுக்கு செல்லவுள்ளேன். ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.
அப்பொழுது செய்தியாளர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் “இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி வருவாரா? என்று கேட்க அதற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் “அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்” என்று கூறினார்.
மேலும் மற்றொரு பத்திரிக்கையாளர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் இசையா பாடலா என்று கேட்க அதற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் “அண்ணா நோ கமெண்ட்ஸ்” என்று சட்டென்று பதில் அளித்துள்ளார்.