கந்த சஷ்டி கவசம் தொடர்பான கருப்பர் கூட்டத்தின் வரம்பு மீறிய விமர்சனம் மிகவும் கண்டனத்துக்கு உரியது.கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கந்தர் சஷ்டியில் வரும் பாடலை பற்றியும் அதில் வரும் பாடலின் பொருளை பற்றியும் “கருப்பர் கூட்டம் ” என்னும் பெயரில் வந்த யூட்யூப் சேனல் ஒன்றில் தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். திருப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் நசீர் இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இந்த சர்ச்சையை பற்றி திருப்பூர் டாக்டர் நசீர் கூறியதாவது: கருப்பர் கூட்டத்தின் இச்செயல் மிகவும் கண்டனத்துக்கு உரியது. “கடவுளை வழிபாடும் அதன் முறைகளும் அவரவர் சொந்த விருப்பங்கள் அதில் தலையிட உரிமை யாருக்கும் இல்லை” என தெரிவித்து உள்ளார்.”மக்கள் மத்தியில் நன்மையை எது விளைவிக்குமோ அவற்றை பேசுவதே அறிவுடைமை “என கூறியுள்ளார்.
மேலும் எடுத்துக்காட்டாக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொன்ன கணியன் பூங்குன்றனார். ‘வியத்தலும் இலமே இகழ்தலும் இலமே’ என்று சொல்லியதை கருத்தில் கொள்ள கொண்டு செயல் பட வேண்டும் என கூறினார்.
“புரட்சி என எண்ணி கொண்டு வார்த்தைகளை அள்ளி இறைத்து மக்கள் மனதில் காயத்தை ஆக்காதீர்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.