இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யப்போவது இல்லை! பாஜக கூட்டணியில் உள்ள எம்பி பேட்டி! 

Photo of author

By Sakthi

இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யப்போவது இல்லை!! பாஜக கூட்டணியில் உள்ள எம்பி பேட்டி!!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஜேடியு எம்.பி தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்களுக்கும் யாதவ இன  மக்களுக்கும் எந்தவொரு உதவியும் செய்ய மாட்டேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
பீகார் மாநில சட்ட மேலவையின் முன்னாள் தலைவரான தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடும் போட்டி மிகுந்த தொகுதியான சீதாமர்ஹி தொகுதியில் போட்டியிட்டார். கடுமையான போட்டி நிலவி வந்த சூழலில் இறுதியாக தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்க்ள சுமார் 55000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து சீதாமர்ஹி தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்கள் “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சூரிஸ் சமூகத்திலிருந்தும், கல்வார் சமூகத்திலிருந்தும் எனக்கு யாரும் வாக்கு அளிக்கவில்லை. குஷ்வாஹாக்கள் கூட என்னை கை விட்டனர்.
ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்கள் பல இடங்களில் குஷ்வாஹாக்களுக்கு சீட் கொடுத்துள்ளார். அந்த ஒரே காரணத்திற்காக எனக்கு யாரும் வாக்களிக்கவில்லை. என்னை தவிர குஷ்வாஹா சமூத்தை சேர்ந்த மக்களுக்கு யாரால் நல்லது செய்ய முடியும்.
யாதவ இன மக்களும் இஸ்லாமியர்களும் என்னிடமிருந்து எந்தவொரு உதவியும் எதிர்பாக்கக் கூடாது என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அவர்கள் என்னை மதித்து அழைத்தால் அவர்களுக்கு நான் மரியாதை தருவேன். டீ முதல் திண்பண்டங்கள் வரை வாங்கிக் கொடுப்பேன். ஆனால் அவர்கள் சார்ந்த எந்தவொரு பிரச்சனையிலும் நான். தலையிடப் போவது இல்லை.
ஏன் சமீபத்தில் கூட ஒரு முஸ்லீம் நபர் என்னிடம் உதவி கேட்டு வந்தார். ஆனால் நான் அவருக்கு உதவி செய்ய மறுத்துவிட்டேன். மேலும் அந்த நபரிடம் ஆர்ஜெடி கட்சிக்கு வாக்களித்த நபராக  இருந்தால் டீ குடித்துவிட்டு கிளம்புங்கள். என்னால் எந்தவொரு உதவியும் உங்களுக்கு செய்ய முடியாது.
தேர்தலில் ஓட்டு போடாமல் உதவிக்காக மட்டும் இங்கு வந்து நின்று கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய கட்சி பாஜகவுடன். கூட்டணி வைத்துள்ளது. அந்த ஒரு காரணத்திற்காக நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. அப்புறம் நான் எப்படி உதவி செய்ய முடியும் என்று கேட்டேன். அந்த நபர் தவறான எனக்கு வாக்களிக்க முடியவில்லை என்ற சோகத்துடன் திரும்பிச் சென்றுவிட்டார்” என்று கூறினார். இவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
எம்.பி தேவேஷ் சந்திர தாக்கூர் அவர்களின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு இணயதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் எப்படி குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உதவி செய்ய முடியாது என்று பேசலாம். இப்படி ஒரு எம்.பி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.