உ.பி-யில் வெடிக்கும்  இந்து-முஸ்லீம்  மத கலவரம்!! பாபர் மசூதியை தொடர்ந்து ஷாஹி மசூதி விவகாரம்!!

Photo of author

By Sakthi

ஷாஹி மசூதில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் மதத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உத்தரபிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. இந்த மசூதி 1529 ஆம் ஆண்டு முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்த ஷாஹி ஜாமா மசூதி முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட போது அங்கு இருந்த இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டு இருக்கலாம். மேலும் இந்து கோவில் இருந்து இருப்பதற்கான கட்டிட சிதலங்கள் இருக்கிறது  அதை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து மத மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக உத்தரபிரதேசம் நீதி மன்றதில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்தது. எனவே இரு தரப்பினர் முன்னிலையில் நீதிமன்ற ஆணையர் மசூதியை ஆய்வு செய்தார். இதற்கு முஸ்லிம் தரப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த ஆய்வு முடிவுகள் நேரடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியானது.

அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆய்வுக்காக  ஷாஹி ஜாமா மசூதிக்கு நீதிமன்ற ஆணையர் வருகை புரிந்த போது, கலவரம் ஏற்பட்டது.போராட்டக்காரர்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது கற்களை கொண்டு தாக்கி இருக்கிறார்கள். மேலும் அரசு வாகனங்களுக்கு தீ வைத்து இருக்கிறார்கள். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள்.

மேலும் 30 போலீசாருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.இந்த போராட்டம்  மேலும் பெரிதாவதை தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கிழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாஹி ஜாமா மசூதி தொடர்பான வழக்கு ஆய்வு முடிவுகள் இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இருந்த நிலையில் அது அடுத்த ஆண்டு ஜனவரி-29 ஆம் நாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.