நாவூற வைக்கும் கிராமத்து ஸ்டைல் ரத்த பொறியல்.. அசத்தல் ரெசிபி..!

0
129

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ஆட்டு ரத்ததை விடிற்காலையில் வாங்கி காலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுடன் சேர்த்து சாப்பிடுவர். தற்போது கிராமத்து ஸ்டைலில் சூப்பரான ரத்த பொறியல் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை:

ஆட்டு ரத்தம் – 1 கப்

சின்ன வெங்காயம் -150 கிராம்

வர மிளகாய் – 3

சீரகம் – 2 டீ ஸ்பூன்

கடுகு – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – அரை கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் – 2 மேசைகரண்டி

செய்முறை :

ஆட்டுரத்ததை கழுவி அதிலிருந்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றவும். அதன்பின்னர், அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் , கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளித்து கொள்ளவும்.

அதில், சின்னவெங்காயம் , வரமிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். நன்கு வதங்கியதும் ரத்தத்தை சேர்த்து மிதமான தீயில் சேர்த்து கிளறவும். உதிரி உதிரியாக வந்ததும் அதில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

Previous articleதமிழகத்தில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ரத்தா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்  
Next articleஇந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்..!