என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு!

Photo of author

By Hasini

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு!

காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதற்கு இணங்க, நாம் எது எந்த குறை என்றாலும், நிறை என்றாலும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் காவல்நிலையத்தைதான் அணுகுகிறோம். அது போல் ஒரு விவசாயி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் வித்தியாசமான புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாடு கடந்த சில நாட்களாக பால் கரக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பிந்த் மாவட்டத்திலுள்ள நாயாகான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், பாபுலால் ஜாதவ்.

45 வயதான இவர் ஒரு விவசாயி. இவருக்கு சொந்தமாக ஒரு எருமை மாடு உள்ளது. இந்த மாடு கடந்த சில நாட்களாகவே பால் கறக்க விடுவதில்லை என்று போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் போலீசாரிடம், நமது வடிவேலு போல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு  யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க என்றும், அதன் காரணமாக மாடு பால் கறக்க மாட்டேங்குது என்று ஊர் மக்கள் அனைவரும் சொல்வதாகவும், இந்தப் பிரச்சினையை  நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தெரிவித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இவர் புகார் கொடுத்த அடுத்த நான்கு மணி நேரம் ஆன நிலையில், காவல்துறையினர் தன்னுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கருதியுள்ளார். எனவே அந்த அப்பாவி மனிதர் தன்னுடைய மாட்டைப் பிடித்துக் கொண்டு நேராக காவல் நிலையத்திற்கே வந்து விட்டார்.

மேலும் அவர் காவல் நிலையதில் என்னுடைய மாட்டையே இங்கே கொண்டு வந்து விட்டேன். என்னுடைய பிரச்சினைக்கு நீங்கள்தான் ஒரு நல்ல முடிவாக சொல்ல வேண்டும் என்றும் அங்கிருந்த பொறுப்பு அதிகாரி இடமும் முறையிட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஷா கால்நடை மருத்துவர் ஒருவரை அந்த கிராமவாசிக்கு  உதவுமாறு போலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே அவரும் அந்த உத்தரவுக்கு இணங்கி அந்த நடவடிக்கையை எடுத்தார். இப்போது அந்த மாடு பால் கறப்பதாக தெரிவித்துள்ளனர்.