என் மக்கள் என் பயணம் பாதயாத்திரை ஆரம்பம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

என் மக்கள் என் பயணம் பாதயாத்திரை ஆரம்பம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மக்கள் என் பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பாதயாத்திரை முலமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக கட்சியின் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை அவர்கள் மீது சமீப தினங்களாக பல புகார்கள் எழுந்து வரும் நிலையில் பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஏற்கனவே வெளியான தகவலின் படி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக கட்சியின் சொத்து மதிப்புகளை மையமாக வைத்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
பாஜக கட்சித் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள இந்த பயணத்திற்கு என் மக்கள் என் பயணம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் 2ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பயணம் தொடங்கவுள்ளது. இந்த பயணம் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் தொடங்கும் இந்த பயணம் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே முடிந்து விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி இந்த பயணத்தை தொடங்குவதாக இருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வந்ததால் அந்த பயணம் நிறுத்தி வைக்கப்பட்டு தற்பொழுது ஜூன் மாதம் 2ம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளது.