மு.க. அழகிரி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

Photo of author

By Sakthi

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் என்னுடைய பங்கு இருக்கும் மு.க அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்த நேரத்திலேயே அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க. அழகிரி திருநெல்வேலி மறைவுக்குப் பின்னர் திமுகவில் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றார் இதன் காரணமாக சில ஆண்டு காலமாக கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருந்த அழகிரி சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான பணிகளில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றார் அதேநேரம் அழகிரிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மௌனம் சாதித்து வந்தார் அழகிரி ஆனாலும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் பாஜகவில் அவர் நிச்சயமாக இணையமாட்டார் அதற்கு மாறாக புதிய கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் என்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் ஆலோசகர்களை கேட்டுதான் எந்த முடிவையும் எடுப்பேன் தமிழக சட்டசபை தேர்தலில் என்னுடைய பங்கு நிச்சயமாக இருக்கும் நான் பாஜகவில் இணைய போவதாக வந்த செய்தி வதந்திதான் புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக போகப்போக தெரியவரும் என்று தெரிவித்தார் அழகிரி.