10 ஆடுகளை காவு வாங்கிய மர்ம விலங்கு? பீதியில் மக்கள்?

Photo of author

By Pavithra

பூவேந்திரன் என்பவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மநாயக்கன் தோட்டத்தில் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 20 பட்டி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு பூவேந்திரன் மாலையில் வீட்டிற்கு அருகே உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அன்று நள்ளிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்து பார்த்த பூவேந்திரன் மர்ம விலங்கு ஒன்று குதித்து ஓடியதை கண்டுள்ளார்.

மேலும் பட்டியிலிருந்து 10 ஆடுகள் கழுத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தன.இதை கண்ட பூவேந்திரன் மனம் பதறி இதைப்பற்றி தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இவர் கொடுத்த தகவலின் பேரில் தாராபுரம் காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மர்ம விலங்கு எதுவென்று தெரியாமல் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.