இந்து கோவில்களை சூறையாடி சாமி சிலைகளை அழித்து அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்!
சில மர்ம நபர்கள் இனவெறி, ஜாதிவெறி இரத்தத்தில் கலந்தே இருக்கின்றனர். அந்த திமிர் உடனேயே ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களை என்னதான் செய்வது. நம் தமிழ்நாட்டில் அனைத்து மதத்தவரும் ஒரு சகோதரதுவதுடனேயே இருக்கிறோம். என்னதான் உட்கட்சி பூசல் போல பல சிறு சண்டைகள், பஞ்சாயத்துக்கள் இருந்தாலும் நாம் சகோதரத்துவத்துடன் தான் இருக்கிறோம்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ரகிம்யார் மாவட்டத்திலுள்ள போங் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளுடன் ஒரு கும்பல் நுழைந்து அங்கிருந்த சாமி சிலைகளை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். இந்த கொடூர செயல்களை அவர்கள் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பின் மூலம் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்து மத தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கானும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்த கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்துள்ளது.