மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை?

Photo of author

By Pavithra

மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவியுள்ளது.ஆரம்ப கட்டத்திலேயே சீனா இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்காதே தற்போதைய இந்தநிலைக்கு காரணம் என்று பல நாடுகளும் சீனாவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடும் குற்றத்தை சீனாவின் மீது சாட்டி வருகின்றது.தற்போது இரு நாட்டவருக்கும் இடையேயான நட்பு விரிசல் அடைந்து உள்ளது.இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் இரு நாட்டவருக்கும் அமைதி போர் நிலவுகிறது என்று கூறலாம்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்துள்ளதாகவும், அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அந்நாட்டு விவசாயத்துறை இதுபோன்ற மர்மமான முறையில் ஏதேனும் விதைகள் பார்சலில் வந்தால் அதனை பயிரிட வேண்டாம் என்றும்,மேலும் அந்த பார்சலினை உள்ளூர் விவசாயத்துறை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இந்தப் பார்சல் சீனாவில் இருந்து வந்தது இல்லை என்று சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த போலி பார்சலை மீண்டும் சீனாவிற்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவின் அஞ்சல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.