ஏரியில் இருந்து வரும் மர்மச் சத்தம்! அச்சத்தில் மூழ்கிய உள்ளூர் வாசிகள்!

Photo of author

By Sakthi

ஏரியில் இருந்து வரும் மர்மச் சத்தம்! அச்சத்தில் மூழ்கிய உள்ளூர் வாசிகள்!
சிலி நாட்டில் இருக்கும் பிரபலமான ஏரி ஒன்றில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதால் உள்ளூர்வாசிகள் அனைவரும் பயத்தில் மூழ்கியுள்ளனர். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிலி நாட்டில் மத்தியப் பகுதியில் லாகுனா டெல் மவுலே என்ற ஏரி ஒன்று உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற ஏரியாகும். இந்த ஏரி முற்றிலுமாக பனி மலைகளுக்கு நடுவில் இருக்கின்றது. இந்த ஏரியில் இருந்து மர்ம சத்தம் கேட்பதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.
அந்த சத்தம் ஏலியன்கள் அதாவது வேற்று கிரக வாசிகளின் சத்தமாக இருக்கும் என்று மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து ஆராய்ச்சியாளர்கள் லாகுனா டெல் மவுலே ஏரியை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர்.
இதையடுத்து அந்த ஆராய்ச்சியில் “லாகுனா டெல் மவுலே ஏரியிலிருந்து வரும் சத்தம் வேற்று கிரக வாசிகளின் சத்தம் இல்லை. இது பனிமலைகள் உடையும் பொழுது ஏற்படும் சத்தமாகும். அது மட்டுமில்லாமல் இந்த ஏரியில் உள்ள பனிமலைகள் மிகவும் லேசாக அமைவதால் ஏற்படும் சத்தம் இப்படி இருக்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் திடீரென்று ஏற்படும் இந்த சத்தத்திற்கு என்னதான் காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.