Seeman: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் நடிகர் விஜய் அவருகையை தொடக்கத்தில் ஆதரித்து வந்தார். ஆனால் விஜய் தவெக மாநாட்டிற்கு பிறகு சீமான் தனது நிலைபாட்டை முற்றிலும் மாற்றி விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். நடிகர் விஜய் அரசியல் வருகையை பார்த்து சீமான் அச்சம் அடைகிறார் என்ற கருத்து சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்த நிலையில் சீமான் நடிகர் ரஜினி அவர்களை சந்தித்துள்ளார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர். ரஜினி சந்திப்பு குறித்து பதில் அளித்தார். அதில் மரியாதை நிமித்தமாக நான் நடிகர் ரஜினியை சந்தித்து இருக்கிறேன் என்று கூறினார். மேலும் அரசியல் களம் என்பது மிக கடுமையான ஒன்று அதில் நிலைத்து நிற்பது மிக கடினம்.
போய் புரளிகள் எதிர்மறையான விமர்சனங்களை நாம் சகித்து கொண்டு இருக்க வேண்டும் எதை பற்றி நடிகர் ரஜினி மற்றும் கமலிடம் முன்பாகவே தெரிவித்து இருக்கிறேன் என்றார். மேலும் இந்த சந்திப்பு என்பது தற்போது உள்ள அரசியல் சூழல், திரையுலகம் பற்றி பேசி இருக்கிறோம் என கூறினார். நாம் தமிழர் கட்சி சீமான் நடிகர் ரஜினி காந்த் அரசியல் வருகையை மிக கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்களின் ஆதரவு பெற ரஜினியை சந்தித்து இருக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.