நாம் தமிழர் கட்சி சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By Jeevitha

Karur: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி தவறாக பேசியது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சட்டசபை இடைத்தேர்தல் நடந்த பொழுது ஒரு பிரசாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இருவரும் ஒரு பாடல் பாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில்  சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி போலீசார் கைது செய்தனர். சில நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த மாதம் ஆகஸ்ட் 4 அன்று அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது மீண்டும் பத்திரிக்கையாளர் முன்னிலையில் அதே பாடலை சீமான் மீண்டும் பாடி, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என கூறி இருந்தார். அப்போது திமுக சார்பில் பல வழக்குகள்  சீமான் மீது காவல் நிலையத்தில் போடப்பட்டன.

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிறகு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 14ம் தேதி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து சீமான் மீது முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசுதல் மற்றும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி அதை இணையத்தில் வெளியிடுவது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.