சோபிதாவுக்கு நாக சைதன்யா இரண்டாவது காதல்!! அவரின் முன்னாள் காதலர் இவர் தான் !!

0
124

சினிமா: நாக சைதன்யா, சமந்தா இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர்கள். அவர்கள் முதன் முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தை ரீ மேக்கில் தெலுங்கு மொழியில் எடுத்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

பிறகு அவர்களது திருமணத்திற்கு வீட்டில் உள்ள பெற்றோர்கள் எதிர்த்தாலும் அதை தாண்டி அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு சில வருடங்கள் கழித்து அவர்கள் விவாகரத்து வேண்டும் என அறிவித்தார்கள். சமந்தா- நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் சோபிதா தான் இருக்கிறார் என பலராலும் அரசல் புரசலாக பேசப்பட்டது.

இதனிடையே நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதாவுக்கும் திருமணம் என அறிவித்திருந்தார்கள். இவர்களுக்கு திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதியில் ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்த நிலையில் நடிகை சோபிதாவுக்கு ஏற்கனவே முன்னாள் காதல் உள்ளது என உறுதியானது.

அவர் பிரணவ் மிஸ்ரா. இவர் பேஷன் டிசைனிங்-ல் மிக பிரபலமானவர். இவர் தற்போது ஹியூமன் பிராண்ட் பேஷன் டிசைனிங் என்ற கம்பெனியின் இயக்குனராக இருக்கிறார் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் 2019 ஆண்டு சந்தித்து சில வருடங்கள் காதலித்து வந்துள்ளார்கள். பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சோபிதா மற்றும் பிரணவ் மிஸ்ரா இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.

Previous articleசவுதியில் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு!! அழைப்பு விடுத்த தமிழக அரசு!!
Next articleஓய்வூதியதாரர்களே அலர்ட்!! இதைச் செய்யாவிட்டால் பென்ஷன் கட்!!