நாக தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியென்றால் இதனை உடனே செய்யுங்கள்!

0
242

நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்து வரும் முக்கிய வழிபாடாக இருக்கிறது. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள், நாக சதுர்த்தி சதுர்த்தி திதி தினத்தன்று விரதமிருந்து, துள்ளுமாவு, படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

கருடபஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே நாக சதுர்த்தி தினமாகும் என சொல்லப்படுகிறது. பொதுவாக ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் ஆரம்பமாகும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியுடன் முறிவடையும்.

இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாகசதுர்த்தி தினமாக கருதப்படுகிறது. அப்படி மிக முக்கியத்துவமானது சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது.

பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு கூட பரிகாரம் செய்து சரிசெய்து விட இயலும், ஆனால் நாக தோஷம் இருப்பவர்களுக்கு பரிகாரமே இல்லை என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் ஜாதகரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தை தாக்குதல் மூலமாக உண்டாகும் தோஷம் மிகவும் ஆபத்தானது என சொல்லப்படுகிறது.

ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் பிற தெரிவிப்பார்கள், இவ்வாறான தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம் என்று சொல்கிறார்கள்.

நாக சதுர்த்தியின் போது நாகத்தை பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகமாக இருக்கிறது.

நாகம்மன் கோவிலில் நாக சதுர்த்தி தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாக தோஷம் நீங்குவதற்கு பலரும் இங்கே வந்து வழிபாட்டில் பங்கேற்றுகொள்கிறார்கள்.

Previous articleஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொறுமை மிக அவசியம்!
Next articleதமிழ்நாடு சுகாதார சங்கத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு உடனே பதிவு செய்யுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here