தல நடிக்க வேண்டிய படம் அது? வாய்ப்பை தவறவிட்ட நடிகர் அஜித்..!

Photo of author

By Priya

தல நடிக்க வேண்டிய படம் அது? வாய்ப்பை தவறவிட்ட நடிகர் அஜித்..!

Priya

Actor Ajith

Ajith: தமிழ் சினிமாவில் தற்போது முன்ணனி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் ரசிகர்கள் இவருக்கு வைத்த பெயர் தல அஜித். தன்னம்பிக்கையின் அடையாளமாக இவரின் ரசிகர்கள் இவரை கொண்டாட தவறுவதில்லை என்றே தான் கூற வேண்டும். சினிமாவில் யாரின் உதவியும் இல்லாமல் தன் தன்னம்பிக்கை, திறமையை மட்டும் வைத்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் அஜித்.

இவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி, ஒரு திரைப்படத்திற்காக இவர் எடுக்கும் ரிஸ்க் என அனைத்திற்கும் ரசிகர்கள் ஏராளம். எந்த ஒரு நடிகரும் செய்ய தயங்கும் செயலை நடிகர் அஜித் செய்துள்ளார். அவருக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் இருந்த போதிலும், அனைத்து ரசிகர் மன்றங்களையும் நடிகர் அஜித் கலைத்தார். இவர் ரசிகர் மன்றங்களை கலைத்தப்பிறகு இவருக்கு சினிமாவில் மிகப்பெரிய சரிவு ஏற்பட போகிறது என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் அதன் பின் வெளியான மங்காத்தா திரைப்படத்தை அவரின் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இதனை கண்டு தமிழ் சினிமா வியப்பில் ஆழ்ந்தது.

இந்நிலையில் தான் நடிகர் அஜித் முதலில் நடிக்க இருந்து பிறகு அந்த படங்களில் இருந்து வெளியேறிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கஜினி, பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான நான் கடவுள் மற்றும் நந்தா ஆகிய திரைப்படங்களில் முதலில் நடிகர் அஜித் நடிப்பதா இருந்ததாம்.

மேலும் இயக்குநர் சரண் இயக்கத்தில் ஏறுமுகன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்ததாகவும், அதன் பிறகு அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. அந்த படம் தான் பின் நாளில் நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம். இந்த திரைப்படம் நடிகர் விக்ரமிற்கு அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையான படமாக அமைந்தது.

தற்போது அஜித்தின் ரசிகர்கள் இந்த படங்களை நடிகர் அஜித் நடித்திருந்தால், மேலும் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பு முனையாக இந்த படங்கள் அமைந்திருக்கும் என்று தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.