பண்டைய காலத்திலிருந்து தமிழகம் எத்தனையோ விஷயங்களில் சிறந்து விளங்கி வருகிறது. நீர் மேலாண்மையானாலும் சரி விவசாயமானாலும் சரி அனைத்திலுமே தமிழகம் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறது.
அதிலும் முக்கியமாக தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஆலயங்களாக தான் காட்சி தருகின்றனர். அந்தளவிற்கு தமிழக மக்கள் மாபெரும் மான்களாக இருந்திருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தை ஆண்ட பண்டைய கால மன்னர்கள் சிறந்த பக்தியுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
ஆனால் தமிழகத்தில் இன்று இருக்கும் ஆலயங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆலயங்கள் சோழமன்னர்கள் கட்டியதுதான் என்பது நிதர்சனமான உண்மை.தமிழகத்தில் எத்தனையோ கோயில்களில் எத்தனையோ சிறப்புகளுடன் விளங்கி வருகின்றன.
அதுபோன்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் அமைந்திருக்கின்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இருக்கக்கூடிய நந்தி தனிச் சிறப்புடன் அமையப்பெற்றிருக்கிறது. அதாவது இந்த கோவிலில் 5 நந்திகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நந்திகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பழமலைநாதரை நோக்கி சுற்றி வலது புறமாக கழுத்தை திருப்பியபடி அமைந்திருப்பது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும் தனிச் சிறப்பாக விளங்கி வருகிறது.
அதோடு இந்து கோவிலில் தேரோடும் வீதிகள் 4 புரத்திலும் ஏழு நிலைகளுடன், ஏழு கலசங்களுடன், வானுயர்ந்த கோபுரங்கள் அமைந்திருக்கிறது. கோவிலின் பழம் பெருமையை இந்த கோபுரங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அதேபோல கயிலாய பிரகாரத்திலிருந்து கோவிலுக்கு செல்லுமிடத்தில் உள்ளது கண்டராதித்த கோபுரம் இதனை தன்னுடைய கணவர் கண்டராதித்த சோழன் நினைவாக செம்பியன்மாதேவி கிபி 957-1001 இக்காலகட்டத்தில் திருப்பணி செய்தது ராஜராஜசோழன் கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது.
அதோடு கோவிலிலுள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராணம் செய்திகளை வெளிப்படுத்தும் கல் சுதை சிற்பங்கள் அமைந்திருக்கிறது என சொல்லப்படுகிறது.