முதல் மதிப்பெண் பெற்ற நந்தினி!! தங்கப் பேனாவை பரிசளித்த வைரமுத்து!!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 என முழு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி அவர்களுக்கு தங்கத்தால் ஆன பேனாவை கவிஞர் வைரமுத்து அவர்கள் பரிசளித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவகள் கடந்த மே மாதம் 8ம் தேதி வெளியானது. இதில் 600க்கு 600 முழு மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி அவர்கள் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மாணவி நந்தினிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிழ்ந்து வருகின்றது. இதையடுத்து மாணவி நந்தினியை நேரில் சந்தித்து தங்கப் பேனாவை கவிஞர் வைரமுத்து அவர்கள் பரிசளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவி நந்தினி அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவி நந்தினியை பாராட்டிய கவிஞர் வைரமுத்து அவர்கள் தங்க பேனாவை மாணவியின் கையில் கொடுத்தார். சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவிக்கு தங்க பேனாவை பரிசளிப்பேன் என்று பதிவிட்டிருந்த நிலையில் இன்று அதை செய்து காட்டியுள்ளார்.
முன்னதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும், விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மாணவி நந்தினியை நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.