நங்கநல்லூர் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்!

Photo of author

By Sakthi

சுவாமி- ஸ்ரீ விஸ்வரூப ஆதிவ்யாதிஹார ஆஞ்சநேயஸ்வாமி.

மூர்த்தி: ராமர், கிருஷ்ணர், விநாயகர், நாகர், கருடர்.

தலச்சிறப்பு: இந்த தளத்தில் ஆஞ்சநேயர் 32 அடி உயரமுடைய ஒரே கல்லினாலான சிலையாக இருக்கிறார் என்பது சிறப்பு இவருக்கு சாற்றப்படும் வடை மாலை மிகவும் சிறப்புடையது. இந்த வடைமாலை 16000 வடை தயார் செய்யப்பட்டு மாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு அதன் பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜராஜசோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் கோவில் கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கு பின்னர் இதுபோன்ற வடிவமைப்பில் கட்டப்பட்ட முதல் கோயில் இதுதான் என்று கருதப்படுகிறது.

92 அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டு தங்கத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆகம சாஸ்திரத்தின் படி கோவில் கட்டப்பட்டது ராமர், கிருஷ்ணர், விநாயகருக்கு, பிறகு சன்னதிகள் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தல வரலாறு: இந்த கோவில் கடந்த 1995ஆம் வருடம் முதல் செயல்பட்டு வருகிறது காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் இந்த ஊருக்கு நங்கைநல்லூர் என்று பெயரிடப்பட்டு தற்சமயம் நங்கநல்லூர் என்றழைக்கப்படுகிறது. ஸ்ரீ விஸ்வரூப ஆதிவ்யாதிஹார பக்த ஆஞ்சநேயர் சுவாமி என்ற பெயருடன் ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கிறார்.

நடைத்திறப்பு: காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், அதேபோல மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கோவில் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.