ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது!! விஜய்-யை விமர்சித்த பிரபல நடிகர் !!

Photo of author

By Sakthi

ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது!! விஜய்-யை விமர்சித்த பிரபல நடிகர் !!

Sakthi

Napoleon has criticized actor Vijay for his film The Code.

CINEMA:நடிகர் விஜயை, தி கோட் படம் தொடர்பாக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நெப்போலியன்.

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன். 90ஸ் கிட்ஸ் களுக்கு நன்கு தெரிந்தவர். தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நடிகர் விஜய் அவர்களை விமர்சித்து யூடியூப் சேனல் பேட்டியில் பேசி இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் விவாதம் செய்யும் வகையில் மாறியுள்ளது.

அப்பேட்டியில் நடிகர் நெப்போலியன், தி கோட் படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருப்பார். அக்காட்சியில் விஜய் தன்னிடம் உள்ள துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லி இருப்பார், அதை வைத்துதான் நெப்போலியன் விமர்சனம் செய்து இருப்பார்.

தமிழ் திரையுலகில் கடின உழைப்பால் உயர்ந்தவர் சிவகார்த்திகேயன் என்றும், தமிழ் திரைப்படத்தில் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக சிவகார்த்திகேயன் உள்ளது. அதனால் மற்றவர்கள் படம் சரியில்லை என்று நான் சொல்லவில்லை, அவரைப்போல மற்றவர்களும் நல்ல படம் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் மீது பொறாமைப்படுவது சரியில்லை எனக் கூறினார்.

இது நடிகர் விஜய் அவர்களை விமர்சனம் செய்வது போல அமைந்தது இவரின் பேச்சு.
இதற்கு எதிர்ப்பாக அந்தணன், நெப்போலியனை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் விஜய்க்கு அதரவாக “பெரிய மனுஷன் அழகு” இது தான என்று கேட்டு உள்ளார்.

விஜய் மற்றும் நெப்போலியன் ஆகிய இருவரும் போக்கிரி படத்தில் கடைசியாக இணைந்து நடித்து இருப்பார்கள். அப்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் தற்போது வரை பேசிக்கொள்வதில்லை.