நாராயணன் என்ற பெயரில் இருக்கின்ற உள்ளர்த்தங்கள்!

Photo of author

By Sakthi

நாராயணன் என்ற நாமத்திலிருக்கின்ற நாரம் என்ற பதத்திற்கு தண்ணீர் தீர்த்தம் என்று பெயர். பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கே துளசி தீர்த்த பிரசாதம் மிகவும் பிரசித்தம் பெற்றது. தீர்த்தம் என்பது நாராயணனின் பெயரில் பாதி என்ற காரணத்தால், பெருமாள் கோவில்களில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நாராயணன் என்ற பெயரில் மறுபாதியிலுள்ள அயனன் என்பதற்கு படுக்கைடையவன் என்று அர்த்தம். பார்க்கடலாகிய தீர்த்தத்தில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்கு அர்த்தமாகும்.

நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளுமிருக்கிறது இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது, என்ற தத்துவத்தையே நாராயணனின் நாமம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

நாராயணனின் திருநாமத்தை நாராயண, நாராயண, நொடிக்கொரு முறை உச்சரித்த படியே இருப்பவர் நாரதர் என புராணங்கள் நாரத முனிவரை பற்றி தெரிவிக்கின்றன. இந்த பிரபஞ்சத்திலிருக்கின்ற அனைத்து லோகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவராக நாரதர் விளங்குகிறார்.

அவர் தோன்றியபோது இந்த உலகத்தில் நீரின் அளவு குறைவாகவே இருந்ததாகவும், அவருடைய பிறப்பிற்கு பிறகு தான் அவர் உச்சரித்த நாராயண, நாராயண, என்ற நாமம் காரணமாக, உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் பெருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.