மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி! வாழ்த்துக்கள் கூறிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்! 

0
141
Narendra Modi became the Prime Minister for the third time! The President of Tamil Nadu Success Club congratulated!
Narendra Modi became the Prime Minister for the third time! The President of Tamil Nadu Success Club congratulated!
மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி! வாழ்த்துக்கள் கூறிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்!
இந்தியா நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் பாஜக கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. மேலும் நரேந்திர மோடி அவர்களே பிரதமராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து பிரதமராக பதவியேற்கும் விழா நேற்று(ஜூன்9) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் சேர்த்து இந்த அமைச்சரவையில் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில் பிரதமராக நரேந்திர மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில் இராஜ்நாத் சிங், ஜே.பி நட்டா, அமித்ஷா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். மேலும் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சௌஹான் அவர்கள் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கெண்டார்.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தெடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர். விஜய் அவர்கள் “இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட திரு நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சத்தியம் செய்தது படியே தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.