மூன்றாவது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி! யாருக்கு என்ன பதவி!! ஆலோசனை நடத்தும் பாஜக!!
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் நரேந்திர மோடி அமைச்சகத்தில் யார் யாருக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று பாஜக கட்சி ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க இன்னும் 32 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் பாஜக கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. மேலும் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ளார். ஜவஹர்லால் நேரு, வாஜ்பாய் ஆகியோர்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி அவர்கள். இந்நிலையில் யார் யாருக்கு என்னென்ன பதவி வழங்குவது என்பது குறித்து பாஜக கட்சி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்கும் விழா நாளை(ஜூன்9) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் யார் யார் என்பதை குறித்தான பட்டியலை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாஜக கட்சி உள்ளது.
பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம்? யார் எல்லாம் இடம் பெற வேண்டும் யாருக்கு என்ன இலாக்காக்கள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து பாஜக கட்சி தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றது.
இது தொடர்பாக பாஜக கட்சியன் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் பாஜக கட்சியின் மூத்த தலைவர் அமித்ஷா அவர்களை டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று(ஜூன்8) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பாஜக கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எல் சந்தோஷ் அவர்களும் உடன் இருந்தார்.
இவர்கள் மூன்று பேரும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். அந்த வகையில் அமைச்சரவையை முடிவு செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பாஜக கட்சியின் கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் யார் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது குறித்தும் எந்தெந்த இலாக்காக்களை வழங்க வேண்டும் என்பது குறித்தும் சந்திர பாபு நாயுடு அவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
எப்படியும் பாஜக கட்சி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பரிந்துரை செய்ததை அப்படியே நிறைவேற்றும் என்று தெரிகின்றது. எனவே நாளை(ஜூன்9) மாலை எந்தெந்த கட்சியில் இருந்து யார் யார் எல்லாம் அமைச்சராக பதவியேற என்பது தெரிந்துவிடும்.