திருமண தடையா? இந்த கோவிலுக்கு வாருங்கள்!

0
287

திருவண்ணாமலையில் இருக்கின்ற நார்த்தாம்பூண்டி திருக்கோவிலில் பிரம்ம தேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் விழித்திருக்கும் தனித்தனியான சன்னதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு திருமண தடை நீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்கே இருக்கின்ற கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். கோவிலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு கோவிலை 27 முறை சுற்றி வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவுடன் தம்பதி சமேதராய் இங்கே வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை பெருமானின் பெருமையை உலகிற்கு சொல்லுகிறது.

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கே இருக்கின்ற கூட்டு ரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டி அடையலாம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஇன்று முதல் வரும் 8ஆம் தேதி வரையில் இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
Next articleகாரியம் வெற்றி பெற நந்தி விரதம்!