முகத்தை பளபளப்பாக மாற்ற நாட்டுச் சர்க்கரை ஃபேஸ் பேக்! இதை எவ்வாறு செய்வது? 

Photo of author

By Sakthi

முகத்தை பளபளப்பாக மாற்ற நாட்டுச் சர்க்கரை ஃபேஸ் பேக்! இதை எவ்வாறு செய்வது?
பொலிவு இல்லாமல் பளபளப்புத் தன்மை இல்லாமல் சில சமயங்களில் நம்முடைய முகம் இருக்கும். அந்த சமயங்களில் நாம் நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்ற பல முயற்சிகளை செய்து வருகின்றோம். அதில் ஒன்றாக நாம் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். நாட்டு சர்க்கரையில் சருமத்திற்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த நாட்டுச் சர்க்கரையை வைத்து எவ்வாறு. முகத்தை பளபளப்பாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நாட்டுச் சர்க்கரை
* தேங்காய் எண்ணெய்
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நாட்டுச் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். அதன் பின்னர் இந்த கலவையை முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.