சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி… பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு…
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்திய நாட்டின் சுதந்திரம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “அனைவரும் சமூக வலைதளப் பக்கத்தின் முகப்பில் தேசியக் கொடியை வைக்க வேண்டும்” என்று எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் 1948ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நாட்டின் 76வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி செவ்வாய் கிழமை கொண்டாடப்படவுள்ளது.
இதை முன்னிட்டு நாட்டின் ஒவ்வொரு தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
அதாவது 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக் கொடியை வைக்குமாறு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “நாட்டு மக்கள் அனைவருடைய வீட்டிலும் மூவர்ணக் கொடியின் இயக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நம்முடைய சமூக வலைதள கணக்குகளின் முகப்பில் தேசியக் கொடியை வைக்குமாறு வேண்டுகோள் வைக்கின்றேன். இதையடுத்து நமக்கும் நமது அன்புக்குறிய நாட்டுக்கும் இடையே உள்ள பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் முதல் கட்டமாக நரேந்திர மோடி அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கதின் முகப்பில் அவருடைய படத்தை எடுத்துவிட்டு தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்துள்ளார்.