நாடு முழுவதும் JEE தேர்வு இன்று தொடங்குகிறது!! 3 ஆம் கட்ட தேர்வின் முதல் நாள்!!

Photo of author

By Preethi

நாடு முழுவதும் JEE தேர்வு இன்று தொடங்குகிறது!! 3 ஆம் கட்ட தேர்வின் முதல் நாள்!!

Preethi

Nationwide JEE exam starts today !! The first day of the 3rd phase exam !!

நாடு முழுவதும் JEE தேர்வு இன்று தொடங்குகிறது!! 3 ஆம் கட்ட தேர்வின் முதல் நாள்!!

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். வருடந்தோறும் தேசிய தேர்வு முகமை யின் சார்பில் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் 4 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.இ.இ. 3-ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்தது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

 

ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் ஜூலை மாத்தின் 20, 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி, ஜே.இ.இ. 3-ம் கட்ட நுழைவுத் தேர்வுகள் இந்தியா முழுவதும் இன்று (ஜுலை20) தொடங்கியது. இந்த தேர்வானது வெளிநாடுகள் உள்ப்பட 334 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் 7,9,519 பேர் கலந்து கொண்டு எழுத உள்ளனர். இந்த தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை உட்பட 15 நகரங்களில் நடைபெறுகிறது.

 

இந்த ஜே.இ.இ தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும். ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுத பதிவு செய்துள்ள மாணவர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டுடன் தேர்வில் பங்கேற்க வேண்டும் எனத் தேசிய தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் எனவும், அனைத்து மாணவர்களுக்கும் முகாகவசம் மற்றும் கிருமிநாசினிகள் தரப்பட வேண்டும் என்றும் தேசிய தேர்வு ஆணையம் அறிவுறுத்துள்ளது.