ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம்! மக்களை வெளியேற்றிய ராணுவம்!

Photo of author

By Hasini

ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம்! மக்களை வெளியேற்றிய ராணுவம்!

இயற்கை நம் மீதுள்ள கோவத்தை எல்லாம் தணிக்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது போல. கடந்த சில மாத காலாமாகவே ஏதாவது இயற்கை பேரழிவுகளினால் மக்கள் இறந்து போவது தொடர்கதையாகி உள்ளது. நாம் சொல்வோம் அல்லவா? வாஷ் அவுட். ஒருவேளை இயற்கையும் அதை கையில் ஏந்தி உள்ளதோ? என்று என்னதான் தோன்றுகிறது.

சாதாரணமாக மழை, வெள்ளம், மலைசரிவு, நிலநடுக்கம், கடும் வெயில், புயல், என நாம் பல்வேறு இயற்கை பேரழிவுகளை சந்தித்தாலும், எரிமலை குழம்பு பொங்கி வந்தால் என்ன செய்வது சொல்லுங்கள். அப்படி ஒரு நிலைமையை சிறிது நினைத்து பாருங்கள். நாமெல்லாம் என்ன ஆவது.

தற்போது அப்படி ஒரு சம்பவம்தான் ஸ்பெயின் நாட்டில் நடந்தேறி உள்ளது. ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுக் கூட்டங்களில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் நேற்று திடீரென சீற்றம் ஏற்பட்டது. மேலும் கரும் புகையுடன் எரிமலை வெடித்து சிதறியது. அதன் காரணமாக எரிமலைக் குழம்பும் வெளியேறத் தொடங்கியது. மேலும் எரிமலைக்குழம்பு வெளியேறியதோடு மக்கள் வசித்து வந்த இருப்பிட பகுதிகளுக்கும் வந்து விட்டது.

இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எரிமலை சீற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால், எரிமலைக்குழம்பு தற்போது வரை வெளியேறி வருவதன் காரணமாகவும் அப்பகுதியில் ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.