கடந்த 24ஆம் தேதி முதல் ரயில் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதல் காரணமாக, உக்ரைன் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறது. முதலில் ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்போம் என்று தெரிவித்த ரஷ்யப் படைகள் தற்சமயம் மனிதர்களையும் கொன்று குவித்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன அதோடு ரஷ்ய படைகள் கைப்பற்றிய பல நகரங்களை உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து மீட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் பலியான கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் நேற்று இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. அவருடைய சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம் ராணி பென்னூர் தாலுக்கா சலகேரி கிராமத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவருடைய வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அதன்பிறகு அவருடைய உடல் தாவணகெரேயிலிருக்கின்ற சோமனூர் சிவசங்கரப்பா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.
இதற்க்கு முன்பாக நவீன் இறந்த செய்தி கேட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடி நவீனின் தந்தை சேகரப்பாவை தொடர்பு கொண்டு உரையாற்றினார். அப்போது நவீன் உங்களுக்கு மட்டும் மகனல்ல அவர் இந்தியாவின் மகன் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார். நபியின் உடலை பார்த்து கதறி அழுத சேகரப்பா தற்போது நிருபர்களிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.