BJP TVK: அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிருப்தி அமைச்சர்களை தவெகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவரின் இந்த இணைவு குறித்து, பலரும் அவர்களது கருத்துக்களை கூறி வருவதோடு, இது விவாதங்களுக்கும் வழிவகுத்ததுள்ளது. அந்த வகையில் இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் தவெக எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்றும், தவெகவை மிகவும் தாழ்மைப்படுத்தி பேசியிருந்தார்.
செங்கோட்டையனின் தவெக இணைவு தவறான முடிவு என்பது போலவும் ஒரு கருத்தை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்கிறார் நயினார், அவருக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். அவர் எங்கு போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர் எங்கு நிற்கலாம் என தொகுதியை தேடி கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நிற்க சொல்லுங்கள் என்று சவால் விட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய நயினார், செங்கோட்டைனுக்கு என்மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை, நான் நியாமான விசயத்தை தானே சொன்னேன். ஒரு வேளை செங்கோட்டையன் என்னை டெபாசிட் இழக்க செய்வாரானால், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த கருத்து, 2026 தேர்தலில் செங்கோட்டையனும், நயினாரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் திருநெல்வேலி தொகுதியில் போட்டி அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

