BJP: இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக ஓராண்டிற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. சுமார் 160 தொகுதிகளுக்கும் மேல் இபிஎஸ் பிரச்சாரம் செய்து விட்டார்.
மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி இந்த முதல் பிரச்சாரம் நேற்று மதுரையில் தொடங்கியது. இந்த நிகழ்வில் பல்வேறு பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை மக்கள் தியேட்டருக்கு போங்க, படம் பாருங்க, விசில் அடிங்க. ஆனால் ஒரு நடிகன் நல்லாட்சி தருவான் என்று நினைக்க வேண்டாம் என்று பேசினார்.
இவர் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டது விஜய்யை தான் என்பதை அங்கிருந்த அனைவரும் அறிந்து கொண்டனர். இவருக்கு பின் பேசிய நயினார் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற முடியும், அனைவரும் என்றால் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன் என்று அண்ணாமலைக்கு பதிலடி தருமாறு பேசினார். கரூர் விபத்து நிகழ்ந்த போது விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை இப்போது அவரை எதிர்ப்பதை அனைவரும் விமர்சித்து வருகின்றனர். விஜய்யை ஆதரிப்பதில் அண்ணாமலைக்கு, நயினாருக்கும் இருக்கும் சச்சரவு பெருகி கொண்டு போகிறது என்பது இந்த மூலம் தெளிவாகிறது.