அதிமுக உழைக்கின்ற கட்சி திமுக பிழைக்கின்ற கட்சி! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கெத்தான பேச்சு!

0
117

உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு பெரிய பிரச்சனை வர இருக்கிறது அவர் மீது நடிகை நயன்தாரா புகார் கொடுக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் கைது செய்யப் போகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்காக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர் அதன் பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூட்டத்தில் உரையாற்றினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 281 வாக்குச் சாவடிகளில் கணக்கெடுத்து தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி பின்பு பட்டியல் அனைத்து பகுதிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நிர்வாகிகள்யுடைய பணிகள் புதிய வாக்காளர்களை இணைக்க வேண்டும் அந்தந்த வாக்குச் சாவடி முகவர்கள், கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள், ஆகியோர் ஒன்றாக இணைந்து பணி செய்ய வேண்டும். புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வாங்குவதற்கு உதவி செய்ய வேண்டும் அவர்கள் நன்றி தெரிவிக்க கூடியவர்கள் நாம் செய்வதை நினைத்து பார்த்து நன்றி சொல்லக் கூடிய இனம் தமிழினம் தான் புரட்சித்தலைவி அம்மாவின் படம் அதோடு எம்ஜிஆர் படம், இபிஎஸ் படம் ,ஓபிஎஸ் படம், போட்ட அட்டையை கொடுத்து வாக்கு கேளுங்கள்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை வர இருக்கிறது. உதயநிதி மீது நயன்தாரா புகார் அளிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட இருக்கின்றார். ஆனால் என்னை சிறையில் போட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். ஆனால் நான் நினைத்தேன் என்றால், இன்றே அவர்களை உள்ளே போக செய்து விடுவேன். இன்று எங்களிடம் அதிகாரம் இருக்கின்றது மிரட்டலுக்கெல்லாம் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்னுடைய பேச்சுக்கு பதில் கூற முடியுமா? என்று அழைப்பு விடுத்திருக்கின்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

பத்து வருடங்களாக அமைச்சராக இருக்கின்ற தொண்டர்கள் ஆகிய உங்களால் மட்டும் தான் உங்களுடைய முயற்சியால்தான் கட்சியின் சாதாரண உறுப்பினர்களின் உழைப்பால் மட்டும்தான் நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம். என்னை முன்னேற செய்து விட்டீர்கள் நான் நெடுங்காலமாக கட்சிக்காக உழைத்தவன் கொடி பிடித்தவன், உழைப்பவர்களுக்கு மரியாதை தருகின்ற கட்சிதான் அதிமுக இங்கு உழைத்தவர்கள் முன்னேறலாம் ஆனால் திமுகவில் உழைத்தவர்கள் முன்னேற இயலாது அதிமுக உழைக்கின்ற கட்சி திமுக பிழைக்கின்ற கட்சி இவ்வாறு அவர் தெரிவிக்கின்றார்.

Previous articleவந்தாச்சு! SBI வங்கியில் வேலை! 8500 காலிப்பணியிடங்கள்! டிகிரி போதும்!
Next articleஅனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்! கொந்தளித்த திமுக நிர்வாகிகள்!