தனுஷை ஜெர்மன் வார்த்தையில் திட்டிய நயன்தாரா!! இது தான் அதற்கு அர்த்தம்!!

Photo of author

By Jeevitha

Cinema News: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் இருக்க கூடாது என தயாரிப்பாளர் தனுஷ் உறுதியாக இருந்த நிலையில், தற்போது அவர் அந்த படத்தை வெளியிட ரூ.10  கோடி கேட்டதால் நயன் அதிர்ச்சியடைந்தார்.

அந்த வெறும் 3 செகண்ட் வீடியோ என்வென்றால் நானும் ரவுடிதான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்கி மற்றும் நயன் பேசிக் கொண்டிருக்கும் வீடியோக்கள் ஆகும் .  அந்த விடியோவை 24 மணி நேரத்தில் நீக்க விட்டால் ரூ.10  கோடி வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதை எதிர்த்து நயன் தனுஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் நயன்தாரா SCHADENFREUDE என்ற ஜெர்மன் வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இப்போது மக்களிடையே அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன பல கேள்விகள் எழுந்துள்ளன. அந்த வார்த்தைக்கு “அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பது” ஆகும். அது மட்டும் அல்லாமல் தோல்வியை கண்டு ஒரு வித சந்தோசம் கொள்வது என கூறப்படுகிறது. நயன்தாராவின் இந்த செயல் பெரிதும் பரவி வருகிறது. இருந்தபோதிலும் பலரும் நயன்தாராவுக்கு ஆதரவாக இருகின்றனர்.