உங்கள் கழுத்தில் உள்ள கருமை 3 நாட்களில் மறைய இந்த பேஸ்ட் போட்டால் போதும்..!!

Photo of author

By Priya

Dark Neck Removal Remedy in tamil: ஒரு சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்துப்பகுதி ஒரு நிறமாகவும் காணப்படும். முகம் பார்ப்பதற்கு பளபளக்கவும், கருமை இல்லாமல் காணப்படும். ஆனால் கழுத்துப்பகுதி அவர்களின் உடல் நிறத்தில் இருந்து மாறுப்பட்டு மிக கருமையாக காணப்படும். இதனால் சேலை கட்டும் போதோ, சுடிதார் போட்டுக்கொள்ளும் போதோ பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரியும். மேலும் ஆண்களுக்கும் இவ்வகை பிரச்சனைகள் ஏற்படாலம். பெண்களுக்கு இவ்வாறாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் அது அவர்கள் கழுத்தில் பல வகையான ஆபரணங்கள் அணிந்து கொள்வதால் அது அவர்களின் தோலில் அலர்சியை ஏற்படுத்தி, அரிப்பு, பிறகு கருமையை ஏற்படுத்துகிறது.

மேலும் சிலர் கழுத்து பகுதியை நன்றாக தேய்த்து குளிக்காமல் இருந்தாலும், இவ்வாறாக ஏற்படும். கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு எளிமையான வீட்டிலேயே பேஸ்ட் தயார் செய்வது எப்படி என்று (how to remove dark neck in tamil) பார்க்கலாம்.

படி1: Cleansing

முதலில் பேஸ்ட் தயார் செய்வதற்கு முன் நம் கழுத்தை Cleansing செய்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் காபி பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை சாறு சேரத்து கலந்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். அவர்கள் காபி பவுடருடன் தக்காளி சாறு சேர்த்து கலந்து கொள்ளலாம்.

இந்த கலவையை கழுத்தில் அப்ளை செய்த நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவிவிட வேண்டும்.

படி 2: பேஸ்ட் தயாரித்தல்

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 2 டேபுள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 2 டேபுள் ஸ்பூன்
  • தயிர் – 1 ஸ்பூன்
  • கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்

ஒரு பவுலில் இவை அனைத்தையும் கலந்து வைத்துக்காெள்ளவும். கழுத்தை Cleansing செய்துவிட்டு இதனை கழுத்தில் அப்பளை செய்ய வேண்டும். ஒரு 20 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும். லேசாக கழுத்தில் தண்ணீர் தெளித்து அதனை நன்றாக தேய்த்து கழுவி விட வேண்டும். இவ்வாறாக ஒரு வாரத்தில் 3 முறை ஒரு நாள் இடைவெளி விட்டு செய்து வந்தால் போதும் கழுத்தில் உள்ள கருமை (kazhuthil ulla karumai neekuvathu eppadi) நீங்கி விடும்.

மேலும் படிக்க: Tomato Facial: பார்லர் செல்லாமல் இந்த தக்காளி பேசியல் செய்யுங்கள்.. உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்..!