கோரோனாவிற்கு மருந்து வேண்டுமா? அப்ப நீங்கள் இதை செய்ய வேண்டும்! தெறிக்க விட்ட மனிதர்!
உலகெங்கும் கொரோனாவின் இரண்டாம் அலை பல சொல்ல முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது நோய் பரவலின் மையபகுதியாக திகழ்கிறது இந்தியா தான்.அமெரிக்காவை அடுத்து இந்தியா மட்டுமே கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆகும்.
ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 2.6 கோடியை தாண்டும் அளவுக்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது.இரண்டாம் அலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், போலீசார், திரையுலகினர், பொது மக்கள், கர்ப்பிணிகள், மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி பாதிக்கப்படுகின்றனர்.
சில நாட்களாக நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் நாடே திணறி விட்டது.இருந்தாலும் முழு ஊரடங்கின் மூலம் கடந்த திங்கள் முதல் நோய் தொற்று சற்று குறைய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரசை ஒழிக்க உலகம் முழுவதிலும் மருத்துவர்கள், மருந்து கம்பெனிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அரும்பாடு பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோரோனாவிற்கு அறிய வகை மருந்து என கூறி மதுரை அருகே ஒருவர் உயிருள்ள பாம்பை பிடித்து சாப்பிடும் வீடியோ வைரலாக சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.